உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருடர் கிடைக்கவில்லையா?

கருடர் கிடைக்கவில்லையா?

கி.வா.ஜ. திருப்பூரில் பேசப் போயிருந்தபோது அங்குள்ள பெருமாள் கோயிலில் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சுவர்கள் எழும்பியிருந்தன. மேல் தளம் போடவில்லை.
ஏன் இன்னும் மேலே கட்டவில்லை? என்று கேட்டார். கி.வா.ஜ. கருடர் கிடைக்கவில்லை! என்றார் அன்பர். அதற்கு கி.வா.ஜ., பெருமாளுக்குக் கருடர் கிடைக்கவில்லையா? ஆச்சரியந்தான் என்றார் இருபொருள்பட (கருடர் என்றால் உத்தரம் என்றும், கருட பகவான் என்றும் பொருள்.)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !