உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், மயானக் கொள்ளை நிகழ்ச்சி இன்று நடக்கவுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் உற்சவம் நேற்று துவங்கியது. இன்று காலை 10.30 மணியளவில், மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. இங்கு காணிக்கையாக செலுத்தும் உணவு, அங்காளம்மன் மூலம் சிவனுக்கு படையலிடுவதாக பக்தர்கள் கருதுகின்றனர். எனவே உணவு பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதில் பங்கேற்க, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூருக்கு வருகை தருகின்றனர்.மயானக் கொள்ளையை தொடர்ந்து, 24ம் தேதி மாலை 4.30 மணிக்கு, தீமிதி விழா, 26ம் தேதி மாலை 3 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !