உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரதமிருந்து சபரிமலை செல்லும் செக் குடியரசின் அய்யப்ப பக்தர்கள்

விரதமிருந்து சபரிமலை செல்லும் செக் குடியரசின் அய்யப்ப பக்தர்கள்

நாகர்கோவில்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆறாவது ஆண்டாக செல்ல உள்ள, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த, 42 பக்தர்கள், நேற்று கன்னியாகுமரி வந்தனர். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர், தாமஸ் பீட்டர். இவரது தலைமையில், அந்நாட்டைச் சேர்ந்த, 62 பேர், டிச., 26ல், தமிழகம் வந்தனர். ராமேஸ்வரம், திருவண்ணாமலை சென்ற இவர்கள், நேற்று காலை கன்னியாகுமரி வந்தனர். இவர்களில், 42 பேர், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல, மாலை அணிந்துள்ளனர்.

குழுவில் இடம் பெற்றுள்ள, மெர்லேஸ், 54, என்பவர் கூறியதாவது: சபரிமலை அய்யப்பனின் வரலாற்றை கேள்விப்பட்ட நாங்கள், தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள், அங்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தோம். தற்போது, ஆறாவது ஆண்டாக வந்துள்ளோம். அய்யப்ப பக்தர்களைப் போன்று, விரதமிருந்து, இருமுடி கட்டியே கோவிலுக்குச் செல்கிறோம்.இந்தாண்டு, 42 பேர், மலைக்குச் செல்கிறோம். கன்னியாகுமரியில் இருந்து குற்றாலம் செல்லும் நாங்கள், ராஜபாளையம் பகுதியில் இருமுடி கட்டி, வரும், 7ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளோம்.ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ள எங்கள் குழுவில், 20 பெண்களும், 22 ஆண்களும் இடம் பெற்றுள்ளனர். அனைவருமே, 50 வயதைத் தாண்டியவர்கள். சபரிமலையில் தற்போது நடக்கும் பிரச்னைகளை அறிந்துள்ளோம். அங்கு கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகளை மதிக்கும் நாங்கள், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், கோவிலுக்கு சென்று, நாடு திரும்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !