உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்

முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் முள் படுக்கையில் பெண் சாமியார் வீற்றிருந்தார். லாடனேந்தலில் பூங்காவனத்தில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் முத்துமாரியம்மனை தரிசனம் செய்கின்றனர். இங்கு நாகராணி அம்மையார் வருடம் தோறும் மார்கழியில் 45 நாட்கள் விரதமிருந்து முன் படுக்கையில் அமர்ந்து தவம் செய்வார். நேற்று (ஜன., 2ல்) காலை பூங்காவனம் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்திய பின் விநாயகர் கோயிலில் இருந்து நாகராணி அம்மையாரை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். முள்படுக்கைக்கு மஞ்சள் நீர் தெளித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்ட பின் நாகராணி அம்மையார் முள்படுக்கையில் ஏறி சாமியாட்டம் நடந்தது. முள் படுக்கை தவம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !