காஞ்சிபுரத்தில் மஹா சுவாமிகள் வார்ஷிக ஆராதனை
ADDED :2509 days ago
காஞ்சிபுரம்: சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிகளின், 25வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவத்தை ஒட்டி, அலங்கரிக்கப்பட்ட தங்கரதத்தில், அவரது படம் வீதியுலா
வந்தது.
காஞ்சி சங்கரமடம், 68வது மடாதிபதி, மஹா சுவாமிகளின், 25வது வார்ஷிக ஆராதனை மஹோத் ஸவம், காஞ்சிபுரம் சங்கரமடம் அதிஷ்டானத்தில் நேற்று (ஜன., 2ல்) நடந்தது.
காலை, 7:00 மணிக்கு ருத்ர ஏகாதசியும், பூர்ணாஹூதியும், பகல், 1:00 மணிக்கு மஹா பெரியவாளுக்கு, மஹா அபிஷேகமும் நடந்தது.இரவு, அலங்கரிக்கப்பட்ட தங்கரதத்தில், மஹா சுவாமிகளின் படம் வைக்கப்பட்டு, சங்கரமடத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று, மீண்டும் சங்கரமடத்தை அடைந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.