குளித்தலை அடுத்த தோகைமலையில், 37ம் ஆண்டு பழனி பாதயாத்திரை துவக்கம்
ADDED :2556 days ago
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலையில், துவரங்குறிச்சியார் பழனியாண்டி சுவாமிகள் மற்றும் தோகைமலை முருகன் பக்தர்கள் பழனி பாத யாத்திரை குழு இணைந்து,
ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று, பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன் படி, நேற்று முன்தினம் (ஜன., 1ல்)மாலை, 37ம் ஆண்டு பாதயாத்திரை துவங்கியது. குழுவில், 400 பக்தர்கள் இடம்பெற்றிருந்தனர். காவடி ஆட்டம், மேள தாளத்துடன், ஐந்து நாள் பாத யாத்திரையை துவக்கினர்.