குன்னூர் ஐயப்ப பக்தர்களின் அன்னதான பெருவிழா
ADDED :2508 days ago
குன்னூர்:குன்னூர் விநாயகர் கோவிலில், ஐயப்ப பக்தர்கள் சார்பில், 30வது ஆண்டு அன்னதான பெருவிழா நடந்தது.
குன்னூர் மவுன்ட்ரோடு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில், ஆண்டுதோறும் அன்னதான பெருவிழா நடத்தப்படுகிறது. விநாயகர் கோவில் ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், 30வது ஆண்டு அன்னதான பெருவிழா நேற்று (ஜன., 2ல்) நடந்தது.
விழாவையொட்டி, ஐயப்பனுக்கு காலை,6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. மதியம், 1:00 மணிக்கு குன்னூர் ஐயப்பன் கோவில் ஸ்தாபகர் சங்கரசுவாமிகள் தலைமையில், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.