வீரநாராயண பெருமாள் கோவிலில் தாயார் உற்சவம்
ADDED :2551 days ago
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று தாயார் உற்சவம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் மரகதவல்லி சமேத வீரநாராயணப் பெருமாள் கோவிலில் அத்யோன உத்சவ விழா நடந்து வருகிறது. விழாவில், 8ம் நாளான நேற்று தாயார் உற்சவம் நடந்தது. தாயாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.