உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல் அஹோபிலத்தில் உக்ர நரசிம்ம ஸ்வாமி

மேல் அஹோபிலத்தில் உக்ர நரசிம்ம ஸ்வாமி

கீழ் அஹோபிலத்திலிருந்து 11 கி.மீ. தூரத்தில் வேதாத்ரி, கருடாத்ரி மலை சிகரங்களின் மத்தியில், பாவநாசிநி நதிக் கரையில் வீற்றிருக்கும் க்ஷேத்தரம் மேல் அஹோபிலம், இங்கு தான் உக்ர நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இரணியனை வதம் செய்த பிறகு நரசிம்ம சுவாமி இங்கு ஒரு குகையில் வீற்றிருந்தார். இன்றும் சுவாமி உக்கரமாக சால கிராம உருவில் அர்ச்சா ரூபியாகக் காட்சி அளிக்கின்றார். இரணியனை வதம் செய்த பின்பும் உக்ர ரூபத்தோடு ஆரண்யத்தில் சுற்றி வந்த சுவாமியை இந்திராதி தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி மஹாலக்ஷ்மி செஞ்சுலக்ஷ்மியாக இங்கு எழுந்தருளி சாந்தமடையச் செய்துள்ளார். குகை கோயிலில் உயர்ந்த பீடத்தில் சுமார் 2 அடி உயரத்தில் சாலகிராம வடிவில் சுயம்புவாக உக்ர நரசிம்ம சுவாமி  காட்சிக் கொடுப்பார். தேவதேவன் சுகப் பார்வையோடு ஒரு பாதத்தை மடித்து மற்றொரு பாதத்தை கீழே விட்டு தொடை மீது இரணியனை படுக்க வைத்து இரண்டு கைகலால் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இருக்கையில் பக்கத்திலேயே நின்று வணங்கியபடி பிரஹல்லாதனோடு கூடிய திவ்விய மங்கல விக்ரக ரூபத்தில் காட்சி கொடுப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !