உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னாலான நரசிம்ம ஸ்வாமி விக்ரஹம்

பொன்னாலான நரசிம்ம ஸ்வாமி விக்ரஹம்

காகதீய அரசன் பிரதாப ருத்ரன் தீவிர மான சிவபக்தனாவார். இவர் தினமும் பொன்னால் சிவலிங்கத்தை செய்து பூஜித்து வந்தார். ஒரு முறை அஹோபிலத்திற்கு சென்றார். அங்கு நீராடி விட்டு சிவபூஜை செய்வதற்காக பொன்னால் சிவலிங்கத்தை தயார் செய்யும் பொழுது அவ்விக்ரஹம் நரசிம்ம ஸ்வாமியாக உருவெடுத்தது. பல முறை முயற்சித்தும் நரசிம்ம ஸ்வாமியாகவே மாறுவதைக் கண்டு அரசன் ஆச்சரியம் அடைந்தார். பிறகு ஸ்வாமியே அசரீரியாக  “பிரதாபா! இஃது நரசிம்ம க்ஷேத்திரம். என்னை மட்டுமே பூஜிக்க வேண்டும். இந்த பொன்னாலான விக்ரஹத்தை கீழ் அஹோபலத்தில் பீடாதிபதி சட கோப ஜீயரிடம் சேர்த்து விடு” என்று உரைத்தார். உடனே பிரதாப ருத்ரர் பொன்னாலான நரசிம்ம ஸ்வாமி விக்ரஹத்தை திருவீதி ஊர்வலமாகக் கொண்டு வந்து சடகோப ஜீயரிடம் ஒப்படைத்தார். இன்றும் அவ்விக்ரஹம் அஹோபில மட பீடாதிபதிகளால் பூஜிக்கப்பட்டு வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர். அவ்வரசனுக்கு அருள் புரிந்த இவ்விடம் இன்றும் ருத்ர வரம் என்று அழைப்பதை அறியலாம். தற்பொழுது 46 ஆவது பிடாதிபதியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆதிவன் சடகோப ரங்கநாத யதீந்திர மஹா தேசிக ஸ்வாமிகள் அஹோபில மடத்தை அலங்கரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !