ஜ்வால நரசிம்மக்ஷேத்ரம்
ADDED :2862 days ago
இந்த க்ஷேத்திரம் மேல் அஹோபிலத்திலிருந்து கிழக்கு திசையில் 2 கி.மீ. தொலைவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் வேதாத்ரி கருடாத்ரி மலைகளுக்கு நடுவில் இருக்கும் அசலச்சாயா மேரு பருவதத்திற்கு கீழ்பாகத்தில் அமைந்துள்ளது. இந்தக் குகைக் கோயிலில் சுவாமி மூன்று அர்ச்சா மூர்த்திகளாக தரிசனம் அளிக்கின்றார்.
1. எட்டுக் கரங்களையுடைய அஷ்டபுஜ நரசிம்ம சுவாமி,
2. நான்கு புஜ நரசிம்ம சுவாமி
3. தைத்யாந்கோத்யுக்த மூர்த்தி ஜ்வால நரசிம்ம சுவாமி உக்ர ரூபத்தில் விகாரமாக இரண்யனை வதம் செய்வதைப் போன்று தரிசனம் கொடுக்கின்றார். இங்கிருக்கும் ஓர் தண்ணீர் குளத்தில் இரண்யனை வதம் செய்த பிறகு கையில் படர்ந்த இரத்தக் கறைகளை போக்கக் கை கழுவினார் என்பது நம்பிக்கை. இன்றைக்கும் இந்த குளத்தின் நீர் சிவந்த வண்ணத்தில் இருப்பது வியப்பான ஒன்று.