உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரதங்கள் எத்தனை வகை?

விரதங்கள் எத்தனை வகை?

பக்தியும் உடலில் தெம்பும் இருந்தால் யாரும் விரதம் மேற்கொள்ளலாம். பதினொரு வகையான விரத முறைகள் உண்டு.

1. யாசிதம்: பகலில் இருவேளை சிறிய உணவு சாப்பிடுதல்.
2. பாதக் கிரிச்சனம்: நல்ல உணவை ஒரு முறை உண்டு இருத்தல்.
3. பன்னகக் கிரிச்சனம்: வில்வம், அரசு, துளசி தளிர்களைத் தண்ணீரில் போட்டு உட்கொள்ள வேண்டும்.
4. அதிக் கிரிச்சனம்: மூன்று நாட்கள் ஒரு பிடி அன்னம் மட்டுமே உண்டிருத்தல்.
5. கிரிச்சனாதி கிரிச்சனம்: பால் மட்டும் 21 நாட்கள் உண்டு இருப்பது.
6. பிரசாபத்ய கிரிச்சனம்: மூன்று தினங்கள் காலை, மூன்று தினங்கள் மதியம், மூன்று தினங்கள் இரவு மட்டுமே உணவின்றி இருந்து, அடுத்த மூன்று நாட்கள் உணவே எடுக்காமல் இருப்பது.
7. பார்க்கக் கிரிச்சனம்: எந்த உணவுமின்றி பன்னி ரெண்டு நாட்கள் இருப்பது.
8. சாந்தாபனக் கிரிச்சனம்: ஐந்து தின விரதம் இது. ஒரு நாள் பசு ஜலம், ஒரு நாள் பால், ஒருநாள் கோமயம், ஒரு நாள் தர்பையில் ஊறிய நீர், ஒரு நாள் உணவின்றி இருப்பது.
9. சாந்திராயண கிரிச்சனம்: வளர்பிறை திதியில் தொடங்கி, தினம் ஒருபிடி அன்னமாகக் குறைத்து வந்து, தேய்பிறையில் உயர்த்தி வந்து முடிக்க வேண்டும். மூன்று பொழுதும் நீராட வேண்டும்.
10. மகா சாந்தாபண கிரிச்சனம்: ஒரு பொருளையே பன்னிரண்டு நாட்கள் உண்டு இருப்பது.
11. வால சாந்திராயணம்: வளர்பிறையில் தொடங்கி, தேய்பிறையில் முடியும் விரதம், தினமும் இரவில் நான்கு கைப்பிடி அன்னம் மட்டுமே உண்டு இருத்தல் வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !