உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவந நரசிம்மக்ஷேத்ரம்

பாவந நரசிம்மக்ஷேத்ரம்

மேல் அஹோபிலத்திற்கு தென்திசையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் பாவந நதிக்கரையில் எழுந்தருளியிருக்கும் சுவாமி என்பதால் இந்த சுவாமிக்கு பாவந நரசிம்ம ஸ்வாமி என்றும், பாவந நதி பாம்பு போல் வளைந்து திரிந்து ஓடுவதன் காரணத்தினாலே இப்பெயர் வந்திருக்க வேண்டும் எனக் கருதுவர். இங்கு எம்பெருமான் ஏழுத்தலை ஆதிசேஷன் படநிழலில் பொலிவோடு அபய ஹஸ்தத்தோடு லக்ஷ்மி நரசிம்மனாகக் காட்சி கொடுப்பார். இங்கு வீற்றிருக்கும் எம்பெருமானுக்கு பிரம்மோற்சவம் முதற்கொண்டு நரசிம்ம ஜெயந்தி வரை பிரதி சனிக்கிழமையும் விசேஷ உற்சவங்கள் நடைபெறும். எந்த வைணவ திவ்விய தேசத்திலும் இல்லாத அளவிற்கு அஹோபில க்ஷேத்திரத்தில் பார்வேட்டை உற்சவம் மகர சங்க ராந்தி மறுநாள் சுவாமி தாயாருடன் இணைந்து பார்வேட்டை உற்சவத்திற்கு கிளம்பி 45 நாட்கள் சுற்றுபுறமுள்ள 5 மண்டலங்களில் 32 கிராமங்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். பால்குண பஞ்சமி முதல் பவுர்ணமி வரை மேல் கீழ் அஹோபிலங்களில் பிரம்மோற்சவங்கள் சிறப்பாக நடைபெறும். இங்ஙனம் அஹோபில க்ஷேத்திரம் நவநரசிம்ம க்ஷேத்திரமாக போற்றப்பெற்று விளங்கி வருகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !