ஐந்து குழி.... மூன்று வாசல்!
ADDED :2862 days ago
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று ரத்னாங்கி அணிந்து உலா வரும் நம்பெருமாளை, படி தாண்டாத தாயார் தனது கோயிலிலிருந்து, ஐந்து குழிகளிலும் தன் ஐந்து விரல்களை வைத்து, மூன்று வாயில்கள் வழியாகக் கண்டு மகிழ்வாராம். அதைக் குறிக்கும்விதமாக தாயார் செல்லும் வழியில் ஐந்து குழிகள் தரையில் உள்ளன. வைகுண்ட ஏகாதசி அன்று, தசாவதாரம் சித்திரிக்கப்பட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருகிறார் மூலவர்.