உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே தரிசனம்!

வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே தரிசனம்!

சீர்காழிச் சீராம விண்ணகரம் தலத்தில் அருளும் பெருமாளின் திருநாமம் திரிவிக்கிரமன். உற்சவர் திரிவிக்கிரம நாராயணன். இவருக்குத் தவிட்டுப்பானை தாடாளன் என்றும் ஒரு பெயர் உண்டு. அந்நியர்களின் படையெடுப்பின்போது, மூதாட்டி ஒருத்தி உற்சவ மூர்த்தியை பாதுகாப்பாக ஒரு தவிட்டுப் பானையில் வைத்துவிட்டதாகவும், பின்னர் பெருமாளின் கட்டளைப்படி திருமங்கையாழ்வாரிடம் ஒப்படைத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆழ்வார், உற்சவ மூர்த்தியை இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்தார். தவிட்டுப் பானையில் இருந்ததால் தவிட்டுப்பானை தாடாளன் என்ற பெயர் பெற்ற உற்சவ மூர்த்தியை வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே தரிசிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !