உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானமடைய திருப்பாச்சிலாச்சிரமம்...

ஞானமடைய திருப்பாச்சிலாச்சிரமம்...

தட்சிணாமூர்த்தியின் திருவடிவிலும், ஆடிய பாதனான நடராஜ திருவடிவிலும் ஈசனின் பாதத்துக்கிடையே முயலகன் எனும் மும்மலங்களின் வடிவான பூதம் அமைந்திருக்கும். ஞானத்தைக் கெடுக்கும் ஸ்தூல வடிவான முயலகன் இல்லாமலும் சில கோயில்களில் நடராஜர் மலர்ப் பீடத்தில் ஆடும் திருக்கோலத்தை நீங்கள் தரிசித்து இருப்பீர்கள். இது மாயை விலகிய அன்பர்களின் இதயக் கமலத்தில் ஈசன் நின்றாடுவான் என்பதைக் குறிக்கிறது. திருஞானசம்பந்தப் பெருமான் கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளைப் பீடித்திருந்த கொடுமையான நோயை நீக்கியத் தலம் திருப்பாச்சிலாச்சிரமம்.

இங்குள்ள நடராஜப் பெருமான் மிக மிக வித்தியாசமாக பாம்பின் மீது நடனமாடிக் கொண்டிருக்கிறார். அவர் திருவடியின் கீழ் பாம்பின் படமும், அவரின் காலின் பின்புறம் பாம்பின் உடலும் காணப்படும். இங்கு பாம்பு என்பது ஆதார சக்கரங்களின் குறியீடு என்று ஆன்றோர்கள் கூறுவர். சரி இங்கு ஏன் முயலகன் இல்லை என்றால், மன்னனின் மகளின் நோயை நீக்கும்படி ஈசனிடம் காழிப்பிள்ளை பாடும்போது, சகலமும் நீங்க வேண்டும் என்று வேண்டினாராம். அதனால் நடராஜர் படிமத்தில் இருந்த முயலகனும் ஈசனை விட்டு நீங்கினார் என்று இந்த கோயில் தலபுராணம் தெரிவிக்கிறது. யோகத்தில், ஞானத்தில் சிறப்படைய விரும்பும் அன்பர்கள் திருப்பாச்சிலாச்சிரமம் கோயில் சென்று ஆடல்வல்லானை தரித்தால் சிறப்படைவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !