தேவிபட்டினம் காளியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை
ADDED :2495 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே ஆற்றாங்கரை உஜ்ஜியினி காளியம்மன் கோயிலில் மார்கழி மாத சிறப்பு 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விளக்கு பூஜை, மாங்கல்ய பூஜை, குங்கும அர்ச்சனை, பஜனை உள்ளிட்டவற்றை அழகன்குளம் அழகிய நாயகியம்மன் மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமா ரெத்தினம் செய்தார். கோயில் டிரஸ்டி எஸ்.காளியம்மாள், இந்து வித்யாலயா பள்ளி முதல்வர் சாந்தி, தொழிலதிபர் நல்லமுத்து, கனகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.