உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாக்கிய நாயனார் குருபூஜை விழா

சாக்கிய நாயனார் குருபூஜை விழா

காஞ்சிபுரம்: சாக்கிய நாயனார் குருபூஜை விழா, காஞ்சிபுரம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்தது.வேளாளர் மரபில் தோன்றிய, 63 நாயன்மார்களில் ஒருவரான சாக்கிய நாயனார், மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில், திருச்சங்கமங்மை என்ற ஊரில் அவதரித்தார்.சாக்கிய நாயனாருக்கு, காஞ்சிபுரம் கோனேரிகுப்பத்தில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில், மூலவருக்கு எதிராக சிலை உள்ளது.மார்கழி மாதம், பூராடம் நட்த்திரத்தையொட்டி, இக்கோவிலில் குருபூஜை விழா நடந்தது.இதில், சாக்கிய நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, நால்வர் நற்றமிழ் மன்றத்தின், திருமுறை வழிபாட்டுக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !