திருக்கழுக்குன்றத்தில் நாளை குருபூஜை விழா
ADDED :2494 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், சுப்பையா சுவாமிகளின், 59வது குருபூஜை விழா, நாளை நடைபெறுகிறது.தொண்டைமண்டல சிவாலயங்களில் முக்கிய தலமாக, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.பெரிய மலையின் மீது அமைந்துள்ள வேதகிரீஸ்வரரை, பல சித்தர்கள் வழிபாடு நடத்தி, ஆன்மிக பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவராக, சைவ நெறிமுறைகளை பரப்பிய, சுப்பையா சுவாமிகள். ஆண்டுதோறும் நடக்கும் அவரது குருபூஜை விழா, நாளை நடைபெறுகிறது. இதை ஒட்டி, சுவாமிக்கு நன்னீராட்டுதலும், தீபாராதனையும், சொற்பொழிவும் நடைபெறுகிறது.