நல்லிணக்கேஸ்வரர் கோயில் நந்தி சிலையில் அசத்தல்
ADDED :2493 days ago
எழிச்சூர்: எழிச்சூர், நல்லிணக்கேஸ்வரர் நந்தி சிலை, நுணுக்கமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் அருகே எழிச்சூர் கிராமத்தில், பழமைவாய்ந்த நல்லிணக்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள, 3 அடி உயர நந்தி சிலையில், நுட்பமான சிற்ப வேலைகள் காணப்படுகின்றன. நந்தியின் நாக்கு, அதன் மூக்கை தொட்டவாறும், ருத்ராட்சை, சலங்கை, மணி உள்ளிட்ட ஆபரணங்கள், தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிலையை, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்டு ரசிக்கின்றனர். மேலும், தங்கள் வேண்டுதல் நிறைவேற, நந்தி காதில் வேண்டிச் செல்கின்றனர்.