கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வெற்றி
ADDED :2457 days ago
இந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மைகள் கிடைக்கும் காரணம் சுக்கிரன் ஜன.30லும், செவ்வாய் பிப்,1லும் இடம் மாறி நன்மை தருவார்கள். புதன் ஜன.16 வரை நன்மை தருவார். மேலும் சனி, ராகு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். ஜன.31க்கு பிறகு மனதில் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
சனிபகவானால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி மனதில் அதிகரிக்கும்.பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். ஜன.17,18ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் பிப்.1,2ல் உறவினர் வகையில் ஒற்றுமை மேம்படும். அவர்களால் முன்னேற்றம் காணலாம். பிப்.6,7ல் சகோதரவழியில் பணஉதவி கிடைக்கும். புதன் ஜன.17ல் இடம் மாறுவதால் அண்டை வீட்டார் வகையில் பிரச்னை வரலாம். பிப்.1க்கு பிறகு புதனால் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு குறுக்கிடலாம்.
பணியாளர்களுக்கு சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும் வந்து சேரும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.
ஜன.30,31ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பிப்.1க்கு பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம்.
தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் மேம்படும். புதன் ஜன.17ல் இடம் மாறுவதால் எதிரிதொல்லை வரலாம். சூரியனால் பொருள் விரயம் ஏற்படலாம். ஜன.3,4,5,8,9,10ல் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. ஜன.21,22ல் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். செவ்வாயால் ஏற்பட்ட பகைவர் இடையூறு, அரசு வகையில் ஏற்பட்ட அனுகூலமற்ற போக்கு முதலியன ஜன.31க்கு பிறகு மறையும்.
கலைஞர்களுக்கு எதிரி தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன ஜன.30க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் ஜன.31க்கு பிறகு சிறப்பான நிலை அடைவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.
ஜன.16க்கு பிறகு புதன் சாதகமற்று காணப்படுவதால் கவனமுடன் படிக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் குருவின் பார்வையால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல், கோதுமை, சோளம், மஞ்சள், பயறு வகைகள், காய்கறிகள், கறுப்பு நிற தானியம் மூலம் மகசூல் அதிகரிக்கும். ஜன.31க்கு பிறகு சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். சுக்கிரனால் மாத பிற்பகுதியில் பணவரவு அதிகரிக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். ஜன.15,16 பிப்ரவரி 11,12ல் சிறப்பான பலனைக் காணலாம்.
ஜன.23,24ல் மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
* நல்ல நாள்: ஜன.15,16,21, 22,23,24,30,31, பிப்.1,2,6,7,11,12
* கவன நாள்: ஜன.25,26 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,7
* நிறம்: நீலம், கருப்பு
* பரிகாரம்:
● தினமும் காலையில் நீராடி சூரிய வழிபாடு
● வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
● சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு பானகம்