உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பணப்புழக்கம்

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பணப்புழக்கம்

கடந்த மாதத்தை விட கூடுதல் பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த மாதம்  நட்புக்கிரகமான சூரியன் 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை. சுக்கிரன் ஜன.30வரையும், புதன் பிப்.1 வரையும் நற்பலன் கொடுப்பர். குரு,கேது மாதம் முழுவதும் நற்பலனை வாரி வழங்குவர். இதனால் எந்த ஒரு காரியத்தையும் துரிதமாக செய்து முடிக்கலாம். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.  கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.


குருவால் மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத் தேவைகள்  குறைவின்றி பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். சுபநிகழ்ச்சிகள்  இனிதே கைகூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பிப்.6,7ல் சகோதரிகளால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.  ஜன.19,20ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் பிப்.1,2ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.  பணியாளர்களுக்கு  சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வுக்கு தடையிருக்காது. கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.  அரசு வகையில் விண்ணப்பித்த கடனுதவி எளிதில் கிடைக்கும். பிப்.1,2ல் உன்னதமான பலன்களை எதிர்பார்க்கலாம். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பிப்.1 க்கு பிறகு உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.

வியாபாரிகளுக்கு விரிவாக்கப் பணிக்காக விண்ணப்பித்த வங்கி நிதியுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்தி லாபம் காண்பதோடு விரயச்செலவு இருக்காது. வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். செவ்வாயால் ஜன.31க்கு பிறகு அரசின் மூலம் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம். எதிர்பாராத வகையில் வருமானம் வரும்.   

கலைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஜன.30க்கு பிறகு முயற்சி தேவைப்படும். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகள் நல்ல பணப் புழக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.

மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். கல்வி வளர்ச்சி காண்பர். பல்வேறு போட்டிகளில் வெற்றி காணலாம்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர்.  குருபலத்தால் ஆசிரியர்களின் ஆலோசனையும் கிடைக்கும். பிப்.1க்கு பிறகு  புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் படிப்பில் அக்கறை தேவை.

விவசாயிகள் நெல், கோதுமை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காண்பர்.  கால்நடை செல்வம் பெருகும்.

பெண்கள் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை சேரும்.  சொந்தபந்தங்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். அக்கம் பக்கத்தினர்களால் நன்மை ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர்.  
சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன்  கிடைக்கும். ஜன.25,26ல் சகோதரவழியில் பணஉதவி கிடைக்கும்.  

விருந்து விழா என அடிக்கடி செல்வீர்கள். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிப்.1க்கு பிறகு பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல்நலம் சிறப்படையும்.

* நல்ல நாள்: ஜன.17,18, 23,24,25,26,பிப்.1,2,3,4,5,8,9,10
* கவன நாள்: ஜன.27,28,29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: மஞ்சள், சிவப்பு

* பரிகாரம்:
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு நெய்தீபம்
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !