உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாலையில் கிழக்கு நோக்கி வழிபாடு

மாலையில் கிழக்கு நோக்கி வழிபாடு

காலையில் கிழக்கு நோக்கி சூரியனை வழிபடுவது வழக்கம். ஆனால் மாலை வேளையில், கிழக்கு நோக்கி  வழிபடும் வழக்கம், லண்டன் அருகிலுள்ள ஸ்டோன் ஹெஜ் என்ற ஊரில் நடக்கிறது. உடலின் மறுபக்கம் ஆரோக்கியம் பெற இப்படி செய்கின்றனர்.  சூரிய வழிபாட்டை எகிப்தில் ஆமன்ரா, கீரிஸில் போபஸ் அப்பலோ, ஈரானில் மித்ரா, சுமேரியாவில் சாமாஷ் என்கின்றனர். கருங்கடல் கரையோரப் பகுதிகளில் சூரிய வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்களை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது.  சீனா, ஜப்பான், மெக்சிகோ, பெரு நாடுகளிலும் சூரியவழிபாடு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !