உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் ..

ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் ..

* கடமையில் முழு மனதோடு ஈடுபடு. உன் எதிர்கால வாழ்வு ஒளிமிக்கதாக அமையும்.                 
* பிறரது நன்மைக்காக பாடுபடும் போது மனம் தூய்மை பெறும். இதனால் கடவுளை தரிசிக்கும் பேறு கிடைக்கும்.
* மனதை சுதந்திரமாக வைத்துக் கொண்டு, இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள். எதிலும் தீவிர பற்று வைக்க வேண்டாம்.     
* ஆன்மிக வலிமை இருந்தால் உலகியல் தேவைகளை, சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.      
* உலகில் நன்மை, தீமை என்னும் வேறுபாட்டை உண்டாக்கும் சுயநலத்தைக் கைவிடுங்கள்.      
* மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்; அறிவின் வழியில் வாழ்வு செல்லத் தொடங்கும்.      
* மனதில் தூய எண்ணம் கொண்டவர்களும், சத்தியசீலர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காணும் பேறு பெறுவர்.       
* அன்பு, வெறுப்பு ஆகிய இரு பண்புகளும் எங்கிருந்து கிளம்பியதோ அந்த இடத்திற்கு மீண்டும் ஒருநாள் திரும்பும்.
* ஆன்மிகம் என்பது வெறும் சடங்கு சம்பிரதாயம் சார்ந்ததல்ல. தூய அன்பே நிஜமான பக்தி.
* தெய்வீகம் மனிதனுக்குள் புதைந்து கிடக்கிறது. அதை விழிப்படையச் செய்வது அவரவர் முயற்சியில் தான் இருக்கிறது.   * பொறுப்புணர்வுடன் பணியில் ஈடுபட்டால் மட்டுமே மனிதனால் எதையும் சாதிக்க முடியும்.      
* பொறுமையே வெற்றிக்கான அடிப்படை. அதை புரிந்து கொண்டால் தோல்வி கண்டு மனம் துவளாது.
* சிந்திக்கும் ஆற்றலை மறக்கடிப்பதையே மூடநம்பிக்கை என்பர். மனதில் இதற்கு இடம் அளிக்காதே.      
* அன்பு ஒன்றே வாழ்வின் அடிப்படை நியதி. ஆனால் வெறுப்பினால் மனிதன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறான்.
* கோபத்தில் சிறப்பாக பணியாற்ற முடியாது. அமைதியான மனநிலையில் கடினமான பணி கூட எளிதாக முடியும்.
* போராட்டமே மோட்சத்திற்கான வழி. சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமானால், நரகத்தின் வழியாகத் தான் அதை அடைய முடியும்.
வழிகாட்டுகிறார் இளைஞர்களின் இதயவீரர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !