கள்ளிக்குடி அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் கோயில் வழிபாடு
ADDED :2539 days ago
கள்ளிக்குடி, கள்ளிக்குடி அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் முனியாண்டி கோயில் விழா நடந்தது. அதிகாலை ஊர் நாட்டாமை வீட்டில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். முனியாண்டி சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் 200க்கும் மேற்பட்ட கிடாய்கள், நூற்றுக்கணக்கான கோழிகள் அடித்து வழிபாடு நடத்தினர். இரவில் அசைவ அன்னதானம் நடந்தது.