உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?

வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?

தாவர  இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக  தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும். ஆனால்  துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில்  உள்ள காற்று மண்டலைத்தையே சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே  ஒவ்வொரு வீடுகளிலும் ஆக்ஸிஜனை அதிகம் வெளியிடும் துளசியை நட்டு வளர்த்து அதிகாலை வேளையில் அதைச்சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.

அதிகாலை  மூன்று ம‌ணிமுத‌ல் ஐந்து ம‌ணிவ‌ரை பிர‌ம்ம‌ முஹூர்த்த‌ம் என்று சொல்லுவார்க‌ள். அதாவ‌து இந்த‌ வேளையில் தான் இய‌ற்கையின் அத்த‌னை அம்ச‌ங்க‌ளும் மிக‌வும் புதிதாதக‌ச் சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ இருக்கும். அதாவ‌து இந்த‌ நேர‌த்தை தான் ஓசோன் அதிக‌மிருக்கும் நேர‌ம் என்று இன்றைய அறிவிய‌லாள‌ர்க‌ள் கூறிகிறார்க‌ள். அதாவ‌து இய‌ற்கைய‌க‌வே காற்றில் ஆக்ஸிஜ‌ன் அதிக‌மாக‌ இருக்கும் நேர‌மான‌ அதிகாலை வேளையில் துள‌சிச் செடியைச் சுற்றி வ‌ந்தால் அதிக‌ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசிக்க‌லாம் என்ப‌து இத‌ன் சாராம்ச‌ம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !