திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2822 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த தை மாத பிரதோஷ வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. சுவாமி சன்னதியில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டப வளாகத்தில் உள்ள பெரிய நந்தி மற்றும் கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களில் உள்ள நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.