பூவேந்தியநாதர் கோயிலில் காணும் பொங்கல் பூஜை
ADDED :2491 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். மூலவர், நந்திபகவானுக்கும் விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தது.காணும் பொங்கலை முன்னிட்டு மாரியூர் மன்னார் வளைகுடா கடற்கரையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கடற்கரை மணல் பகுதியில் சாப்பிட்டு பொழுதை கழித்தனர்.