மதுரையில் சத்யநாராயண பூஜை நாளை ஜன., 20ல் நடக்கிறது
ADDED :2493 days ago
மதுரை: வி.எச்.பி., சார்பில் சகல சவுபாக்கியங்கள் அள்ளித்தரும் நோக்கத்தில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சிவன் கோயில் அருகே தம்பதியர் பங்கேற்கும் சத்ய நாராயண பூஜை நாளை (ஜன., 20) மதியம் 3:00 மணிக்கு நடக்கிறது. குடும்ப நலன், குழந்தை பாக்கியம், வியாபார அபிவிருத்தி, கல்வி வளர்ச்சிக்காக நடத்தப்படும் இப்பூஜையில் பங்கேற்க கட்டணம் இல்லை. செம்புக்கலசம் அல்லது சிறிய குடம், டம்ளர், கற்பூரத்தட்டு, பூஜைமணி, சிறிய கரண்டியுடன்
தம்பதியர் வரலாம். விவரங்களுக்கு 98421 97062 ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.