மதுரை செல்லூர் உச்சினி மாகாளி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :2493 days ago
மதுரை: மதுரை செல்லூர் உச்சினி மாகாளி அம்மன் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இவ்விழா ஜன.,11 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், இரவு கும்மிப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. பைரவர் பூஜை, அன்னதானம், விளையாட்டு போட்டிகளும் நடந்தன. விழா இறுதிநாளில் நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சாலியர் சமூக உறவின்முறை விழா குழுவினர் செய்திருந்தனர்.