உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூசவிழா: கோயில்களில் குவிந்த பக்தர்கள்

தைப்பூசவிழா: கோயில்களில் குவிந்த பக்தர்கள்

தைப்பூசத்தை முன்னிட்டு அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தண்டாயுதபாணி மலைக்கோவிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோவிலுக்கு பால்குடம்,  தீ மிதித்து நேர்த்திக்கடன் பக்தர்கள் செலுத்தினர். குன்றத்தூர் சுப்பிரமணி சுவாமி கோயிலில் தைபூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் கப்பிரமணியசுவாமி பக்தர்களுக்க அருள்பாலித்தார். தைபூசத்தையொட்டி உடுமலை பிரச்னை விநாயகர் கோவிலில் சுவாமி சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !