வடவள்ளியில் சவுபாக்கியம் தரும் சத்ய நாராயண பூஜை
ADDED :2483 days ago
வடவள்ளி:பி.என்.புதூரில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சவுபாக்கியங்கள் தரும் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை நடந்தது.தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சவுபாக்கியங்கள் தரும் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை, பின்.என்.புதூரில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று (ஜன., 20ல்) நடந்தது.
ஸ்ரீ மாகவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ சத்ய நாராயணருக்கு பூஜை செய்தால், குழந்தை பாக்கியம், வியாபாரம், கல்வி, செல்வம் என சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். இந்த பூஜையின் சிறப்பம்சம், பூஜையில் கலந்து கொள்பவர்கள், தம்பதியர்களாகவே கலந்து கொள்ள வேண்டும். நேற்றைய (ஜன., 20ல்) பூஜையில், 101 தம்பதியர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத்தலைவர் சீனிவாசன் ராஜாஜி, துணைத்தலைவர் சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.