உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உன்னை அறிந்தால்! நீ உன்னை அறிந்தால்!!

உன்னை அறிந்தால்! நீ உன்னை அறிந்தால்!!

* உன்னை அறிந்தால் வாழ்வில் இன்பமே.
* எல்லா உயிர்களின் மீதும் கருணை காட்டுங்கள்.
* ஒழுக்கமே சொர்க்கத்தின் திறவுகோல்.
* பாவம் என்பது இன்பத்தில் தொடங்கி துன்பத்தில் முடியும்.
* எப்போதும் பொதுநோக்கத்துடன் செயலாற்றுங்கள்.
* தேவைக்கும் சற்று குறைவாகவே உண்ணுங்கள்.
* நல்லவர் மனம் நோகும் செயலில் ஈடுபடாதீர்கள்.
* நண்பர்களை ஒருபோதும் பிரிக்க முயலாதீர்கள்.
* ஆசை காட்டி மோசம் செய்வது பெரும் பாவம்.
* உதவும் மனம் கொண்டவனே உண்மையான மனிதன்.
* தவறைத் திருத்திக் கொள்பவனே நல்லவன்.
* பிறருடைய பசிப்பிணி போக்குவதே ஜீவகாருண்யம்.
* மனஒருமையுடன் கடவுளை வணங்குபவருடன் சேருங்கள்.
* உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோரை விட்டு விலகுங்கள்.
* நல்ல எண்ணத்தால் மனதை கனியச் செய்யுங்கள்.
* கோள் சொல்லி பிறர் குடும்பத்தை பிரிக்க நினைக்காதீர்கள்.
* பிறரைக் குறை சொல்லாமல் இருந்தால் நம்மிடம் குற்றம் உண்டாகாது.
* இயற்கையை மாற்றும் தெய்வீக சக்தி நம்முள் இருக்கிறது
* உத்தமர்களுடன் விரும்பி நட்பு பாராட்டி மகிழுங்கள்.
* காலம் ஒவ்வொரு நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை பயனுள்ளதாக்குங்கள்.
* உலகம் நலம் பெற தினமும் வழிபாடு செய்யுங்கள்.
* நம் தெய்வம் பெற்றோரே.
* கொலை, சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் ஆகியவற்றை அறவே நீக்குங்கள்.
* மெதுவாக பேசுங்கள், அது ரகசியங்களை காக்கும். உண்மையைப் * பேசுங்கள், அது வார்த்தைகளை பாதுகாக்கும். வழிகாட்டுகிறார் வள்ளலார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !