உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளைக் கண்டியுங்கள்

குழந்தைகளைக் கண்டியுங்கள்

குழந்தைகளை கண்டித்து திருத்தினால் தான் அவர்களின் எதிர்காலம் சிறக்கும் என்கிறது பைபிள். ’பிள்ளையைத் தண்டியாமல் விடாதே. அவனை பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்’ என்னும் வசனம்  குறிப்பிடத்தக்கது. பதவியில் உள்ள பலர், தங்களை பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்கள் அடித்து திருத்தியதால் தான்  இன்று இத்தகைய நிலைக்கு வர முடிந்தது என பெருமையுடன் குறிப்பிடுவதுண்டு. பெற்றோரும் தவறு செய்யும் போது குழந்தைகளைக் கடிந்து பேசி திருத்த வேண்டும். ’பிரம்பும், கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்’ என்னும் வசனம் இதை தெளிவுபடுத்துகிறது. குழந்தைகள் மீது  அன்பு மிக்கவர் இயேசு. அவரே குழந்தைகளைத் திருத்த பிரம்பைக் கையில் எடுங்கள் என்று சொன்னால் அதில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பதை உணருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !