பொள்ளாச்சியில் போலீஸ் சார்பில், பாத யாத்திரை பக்தர்களுக்கு அறிவுரை
பொள்ளாச்சி:பொள்ளாச்சி போலீஸ் சார்பில், பழநிக்கு செல்லும் பக்தர்களுக்கு,ரிப்ளக்டர் ஸ்டிக்கர்களை ஒட்டி பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.தைப்பூசத்தையொட்டி, பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பக்தர்கள் பாத யாத்திரை சென்று வருகின்றனர். காவடி எடுத்தும்; பக்தி பாடல்களை பாடியபடியும் பக்தர்கள் செல்கின்றனர். ஊஞ்சவேலாம் பட்டியில், பொள்ளாச்சி போக்குவரத்து போலீசார் சார்பில் நடந்த பழநி செல்லும் பாத யாத்திரை பக்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டி.எஸ்.பி., ஜெயராம், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர், வாகன ஒட்டுனர்கள் கவனத்தை கவரும் ஒளிரும்ரிப்ளக்டர் ஸ்டிக்கர்களை பக்தர்களுக்கு ஒட்டி அனுப்பி வைத்தனர்.அப்போது போலீசார், இரவு நேரங்களில், ஒளிரும், ரிப்ளக்டர் ஸ்டிக்கர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ரோட்டோரங்களில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். நள்ளிரவு பயணங்களை தவிர்த்து ஓய்வு எடுத்துச் செல்ல வேண்டும். ரோட்டோரம் செல்லும் பக்தர்கள், வாகனங்கள் செல்வதை கண்காணித்து, கவனமுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும், உள்பட பல்வேறு அறிவுரைகளும் வழங்கினர்.