திருப்பூர் சிவன்மலையில் தியான பயிற்சி
ADDED :2478 days ago
திருப்பூர்:சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திரு விழா முன்னிட்டு, மலை அடிவாரத்தில் இலவச தியான பயிற்சி முகாம் நடந்துவருகிறது.
காங்கயம் ஸ்ரீ ராம்சந்த் மித்ர மிஷன் சார்பில் நடந்த தியான பயிற்சி முகாமில், 20 நிமிட இதய நிறைவு தியான பயிற்சி அளிக்கப்படுகிறது.கடந்த இரண்டு நாட்களாக நடந்த இப்பயிற்சி முகாமில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
தியானம், யோகா தொடர்பான புத்தக கண்காட்சியும், குழந்தைகளுக்கு நுண்ணறிவை வளர்க்கும் விதமான பயிற்சிகளும் நடந்தது.இதில், ஸ்ரீ ராம்சந்த் மித்ர மிஷனை சேர்ந்த, 50 பயிற்சி ஆசிரியர்கள், 75 தன்னார்வலர் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இன்றுடன் தியான முகாம் நிறைவு பெறுகிறது.