உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரி திருப்பதி கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்

குமரி திருப்பதி கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்

நாகர்கோவில்: குமரியில் கட்டப்பட்டுள்ள, திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம், வரும், 27ல் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கின.கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திரா வளாகத்தில், 5.5 ஏக்கர் பரப்பளவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டள்ளது. திருப்பதி போல, மூலவர் மற்றும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 40 அடி உயர கொடி மரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம், 27-ல் காலை, 7:30 மணிக்கு நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள், நேற்று மாலை துவங்கின. திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர், சஷோத்திரி தலைமையில், 60 அர்ச்சகர்கள் இதை நடத்துகின்றனர். 27ம் தேதி காலை, கும்பாபிஷேகம் முடிந்த பின், பகல், 12:30 மணி முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அன்று மாலை, 4:00 மணிக்கு, சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.

நிகழ்ச்சி விவரம்:

24.01.2019
காலை 9.00 மணி முதல் 12.00 மணி : க்ஷீரதிவாசம்
மாலை 6.00 மணி முதல் 8 மணி வரை : ஹோமம், பூரணாஹூதி

25.01.2019
காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை : ஜலதிவசம்
மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை : ஹோமம், பூரணாஹூதி

26.01.2019
காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை : கலச ஸ்நபனம்
மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை : மகா சாந்தி திருமஞ்சனம், பூரணாஹூதி
இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை : சயநதிவசம்

27.01.2019

காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை : மகா கும்பாபிஷேகம், துவஜாரோஹணம்
மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை : ஸ்ரீனிவாச கல்யாணம்
இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை : துவஜாவரோஹணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !