திருப்பூர் தைப்பூசத்தை முன்னிட்டு, சன்மார்க்க சங்கத்தில் ஜோதி ஒளி வழிபாடு
ADDED :2481 days ago
திருப்பூர்:தைப்பூசத்தை முன்னிட்டு, திருப்பூர், ஆலாங்காடு கருவம்பாளையம் சன்மார்க்க சத்திய சங்கத்தில், ஜோதி வழிபாடு நடந்தது.காலை, 6:00 மணிக்கு, அகவல் பாராயணமும், அதனை தொடர்ந்து, ஜோதி வழிபாடும் நடந்தது.
தொடர்ந்து, சன்மார்க்கவாதிகள், வள்ளலாரின் கொள்கை, கோட்பாடுகள் குறித்து பேசினர். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை பாராயணம் செய்து வணங்கினர்.சன்மார்க்க சங்க தலைவர் ராமசாமி தலைமையில், தனலட்சுமி, ஜோதிமணிசேகரன் உட்பட 64 பேர் பாராயணம் செய்தனர்.
நிர்வாகிகள், சந்தரேஷ்பரேஷ் நாராயணசாமி, வேலுசாமி ஆகியோர் பேசினர். துணைத்தலைவர் புருஷோத்தமன் கந்தசாமி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கினர். பொருளாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.