மம்சாபுரத்தில் புனித செபஸ்தியார் சப்பரபவனி
ADDED :2481 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: மம்சாபுரம் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு சப்பரபவனி நடந்தது.
இவ்ஆலய விழா கடந்த ஜன.19 அன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கி,இரண்டாம்நாள் திருப்பலி நடந்தது. மூன்றாம் நாள் சப்பரபவனி நடந்தது. மம்சாபுரம் புனித அமலோற்பவ அன்னை ஆலயத்திலிருந்து துவங்கிய சப்பரபவனி முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை வந்தடைந்தது.
வடபட்டி பாதிரியார் பெரிய நாயகம் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. வட்டார அதிபர் அல்வரஸ் செபஸ்டின், உதவி பாதிரியார் அந்தோணிதுரைராஜ், சகோதரர் மனோஜ் பங்கேற்று திருப்பலியை நிறைவேற்றினர். ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊர்நிர்வாகிகள் செய்திருந்தனர்.