உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயக்கன்பாளையம் அருகே பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் விழா

பெரியநாயக்கன்பாளையம் அருகே பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் விழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனுாரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில், வரும், 26ம் தேதி முதல் பிரமோற்சவம் விழா
துவங்குகிறது.

அன்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சூரிய பிரபை திருவீதி புறப்பாடுநடக்கிறது.

தொடர்ந்து, கருடவாகனம், சேஷவாகனம், பல்லாக்கு மோகினி அலங்காரம், வேணுகோபால அலங்காரம், திருத்தேர், தொட்டி திருமஞ்சனம், மட்டை அடி உற்சவம், தீர்த்தவாரி ஆகியன நடக்கின்றன.

விழாவையொட்டி ஹம்ச வாகனம், அனுமந்த வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், புஷ்பக விமானங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழா ஏற்பாடுகளை லட்சுமி நரசிங்கப் பெருமாள் பக்த ஜனா சபா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !