வீண் பேச்சு குடிகெடுக்கும்
விவசாயி ஒருவன் உழைக்க மனமின்றி வீண் பொழுது போக்கினான். ஒரு நாள் நண்பனின் மூலம் அபூர்வச் செடி ஒன்று கிடைக்க அதை நட்டான். பூக்கும் பருவத்தை அடைந்த செடி, பூக்களுக்கு பதில் சில்லரை காசுகளைக் கொடுத்தது. ஆச்சர்யத்தில் மூழ்கிய விவசாயிக்கு பேராசை எண்ணம் முளைத்தது. ’வயலில் நட்டு வைத்து உரமிட்டால் இன்னும் அதிகமாக காசு கிடைக்கும். பணக்காரனாக வாழலாம்” என எண்ணினான். செடி இருந்த தொட்டியைச் சுமந்தபடி தோட்டம் நோக்கி நடந்தான். தெரிந்த ஆள் ஒருவர் ஆட்டைத் தோளில் சுமந்தபடி எதிரில் வந்தார். அவரிடம், ”என்ன ஆட்டைச் சுமந்து செல்கிறீர்களே? எனக் கேட்டான்.
”இதன் கால் முறிந்ததால் வைத்தியரிடம் செல்கிறேன்” என நடந்ததைச் சொன்னார் அவர். ”என் வாழ்வில் பிரச்னை ஏதுமில்லை. தினமும் மணிக்கணக்கில் வீண்பொழுது போக்கினாலும், கடவுளே முன்வந்து பணம் தரும் செடியை பரிசளித்திருக்கார்.” என்றான் விவசாயி. பேச்சில் கவனம் இருந்ததால் சுற்றி நடப்பதை இருவரும் கவனிக்கவில்லை. விவசாயியின் தலையில் இருந்த செடியைத் தின்ற ஆடு ஏப்பம் விட்டது. இதை பார்த்த விவசாயி கதறினான். எதில் ஈடுபட்டாலும் பொறுப்பு இல்லாவிட்டால் அதோகதி தான்!