உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்: ஐந்தரிசி பணியாரம்

பிரசாதம் இது பிரமாதம்: ஐந்தரிசி பணியாரம்

என்ன தேவை

அரிசி        –    100 கிராம்
பாசிப்பருப்பு        –    50   கிராம்
உளுந்தம் பருப்பு    –    50 கிராம்
ஜவ்வரிசி        –    50 கிராம்
வெல்லம்        –    200 கிராம்
எண்ணெய்        –    50 மி.லி.,
வெந்தயம்        –    1 ஸ்பூன்

* எப்படி செய்வது?

அரிசி, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் களைந்து ஊற வைக்கவும். ஜவ்வரிசியைத் தனியாக ஊற வைக்கவும். ஊறியவுடன் எல்லாவற்றையும் சற்று கரகரப்பாக அரைத்து அதில் வெல்லம், 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து வட்டமான ஏந்தல் கரண்டியால் பணியாரத்தை ஊற்றவும். மேலே எழும்பி வந்தவுடன் திருப்பி விட்டு எடுத்தால் ’ஐந்தரிசி பணியாரம்’ ரெடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !