உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வீரமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கோபிசெட்டிபாளையம்: கோபி, பாரியூர் நஞ்சகவுண்டம் பாளையம் கிராமம் அருகே, புதுக்காடு பகுதியில், வீரமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. இதற்காக, கடந்த 27ல், பவானி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை, 10:30 மணிக்கு, சிவாச்சாரியர்கள், வேதமந்திரம் முழங்க, கோவில் விமானத்துக்கு, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. பின் கோமாதா பூஜை, மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இந்த விழாவில், புதுக்காடு, நஞ்சகவுண்டம்பாளையம், மேட்டுவலவு, பாரியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !