உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுார் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கோவிலுார் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கோவிலுார்: மணம்பூண்டி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டியில் உள்ள பழமையான மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை வெகுவிமர்சையாக நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னஷே்வர பூஜை, பூர்வாங்க சாந்திகிரி ஹோமங்கள், முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, கலசபூஜை, யாக வேள்வி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை முடிந்து 9.30 மணிக்கு கடம் புறப்பாடாகி மகா மாரியம்மன் மூலகலசம் மற்றும் மூலஸ்தானத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !