கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2451 days ago
குளித்தலை: குளித்தலை பஜனை மடத்தில், ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் புனிதநீர் எடுத்து, பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் சென்றனர். கடம்பவனேஸ்வரர், பேராளகுந்தாளம்மன், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்து, கோவில் வந்தடைந்தனர். யாகசாலையில் இரண்டு கால பூஜை நடந்தபின், நேற்று காலை, 9:00 மணிக்கு, கோவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாக்குழு சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.