உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

தில்லையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணியில் தில்லையம்மன், தில்லை காளியம்மன், வீரம்மாகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நாளை 1ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, இன்று (31ம் தேதி) காலை 10:00 மணியளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், தீபாராதனை; தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத சங்கிரணம், அங்குரார்ப்பணம், முதல் கால யாகபூஜையும் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான நாளை (1ம் தேதி) காலை 5:30 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, சுமங்கலி பூஜை, யாத்ரதானம், கடம் புறப்பாடு நடந்து, காலை 8:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !