உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று துவங்கியது. கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நேற்று மாலை 6:00 மணிக்கு பூத்தமலர் பூ அலங்காரத்துடன் திருவிழா துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. கோயில் முழுவதும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 9:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், அம்மன் திருத்தேரில் நகர் பகுதியில் வீதியுலாவும் நடக்க இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !