உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண் சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

மண் சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருத்தாசலம்: விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மண்சோறு சாப்பிட்டு, நந்தீஸ்வரரிடம் மனு அளித்தனர்.


விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு யாத்திரை செல்ல மாலை அணிந்துள்ளனர். இவர்கள், ஆண்டுதோறும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்.அதன்படி, நேற்று காலை ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குவிந்து, விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என தரையில் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.தொடர்ந்து, கோரிக்கை மனுவை விருத்தகிரீஸ்வரரிடம் கொடுக்கும் விதமாக, எதிரில் உள்ள பிரதோஷ நந்தியிடம் மனு கொடுத்தனர். முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், தலைவர் தனவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !