உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வியாழன் உட்பட நான்கு கிரகங்களை இன்று வானில் ஒன்றாக பார்க்கலாம்!

வியாழன் உட்பட நான்கு கிரகங்களை இன்று வானில் ஒன்றாக பார்க்கலாம்!

சென்னை : செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கோள்களை ஒரே நேரத்தில், இன்றிரவு வானத்தில் கண்டு ரசிக்கலாம் என, சென்னை வானவியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் செவ்வாய். செவ்வாய், சூரியனை சுற்றி வர 687 நாட்களாகும். சூரியக் குடும்பத்தில் பெரிய கோள்கள் வியாழன், சனி. ஒருமுறை சூரியனை வியாழன் கோள், சுற்றி வர 12 ஆண்டுகளும், சனிக்கோளுக்கு 30 ஆண்டுகளும் எடுத்துக் கொள்கின்றன. சூரியனை வெள்ளிக்கோள் சுற்றி வர 224 நாட்கள் ஆகின்றன. வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு கோள்களையும் ஒரே நேரத்தில் வானத்தில் காண்பது அரிது. இந்த நான்கு கோள்களையும் இன்று இரவு 7.45 மணி முதல் 9 மணி வரை ஒரே நேரத்தில் காணலாம். இந்த கோள்களை கண்களால் பார்த்து ரசிக்கலாம். இதுகுறித்து, சென்னை பிர்லா பிளானட்டோரிய வானவியல் விஞ்ஞானி அய்யம்பெருமாள் மேலும் கூறுகையில், ""வெள்ளி, செவ்வாய், சனி, வியாழன் ஆகிய கோள்களை இரவு நேரத்தில் வானத்தில் தெளிவாகக் காணலாம். இரவு 7.45 மணிக்கு மேற்கு பகுதியில் வெள்ளி கோளையும், கிழக்கு பகுதியில் தலைக்கு நேர் எதிரே வியாழன் கோளையும், கிழக்கு பகுதியில் இரவு 9 மணிக்கு சனி கோளையும், கிழக்கு பகுதியில் அடிவானத்தில் சனி கோளையும் பார்க்கலாம். இதனால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இரவு நேரத்தில் அனைத்து கோள்களையும் கண்களால் பார்க்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !