உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலக்கால் தர்க்காவில் சந்தனக்கூடு திருவிழா!

மேலக்கால் தர்க்காவில் சந்தனக்கூடு திருவிழா!

மேலக்கால் : மேலக்கால் கணவாய் வருசை இப்ராஹிம்ஷா சாகிப் ஒலியுல்லாஹ் தர்க்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதையொட்டி பிப்.23 ல் மாலை சிறப்பு தொழுகையுடன் அறங்காவலர்கள், முஸ்லிம்கள் கூடி கொடியை சுமந்து ஊர்வலம் சென்றனர். திருமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள கூடத்தில் புனித திருக்குரான் வேதம் முழங்க கொடியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் பக்கீர்கள் மயில் சாமரம் வீச அறங்காவலர்கள் கணவாய்பிச்சை, நாகூர்மீரான், சேட்பஷீர், ஆசாத்நாகூர்மீரான், ரகமத்துல்லா ஆகியோர் வைகை புனித நீரில் கலந்த சந்தனக்குடத்தை சுமந்து ஊர்வலம் சென்றனர். மேலக்கால் கருப்புச்சாமி,அய்யனார் சுவாமி கோயிலில் சூடம் காட்டி, பின்னர் கிராமத்தெய்வங்களை வழிப்பட்டு தர்க்காவில் வந்து அனைவருக்கும் பால், சந்தனம் வழங்கினர்.ஊராட்சி தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் ஒச்சப்பன், முத்து, கிராமத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !